உள்ளூர் செய்திகள்

தனக்காக கல்லறை கட்டியவர்!

படத்திலுள்ளவர் பெயர், அய்யப்பன்; வயது, 79. இவரது, மனைவி சரஸ்வதி, வயது, 70. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள், கேரள மாநிலம், பாலக்காடு, மண்ணுாரில் உள்ள தங்கள் வீட்டில், 'விருந்தாவனம்' என்ற பெயரில் கல்லறை கட்டி, மரணிக்கும் நாளுக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள்; அரபு நாடான ரியாத்தில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்கள் அனுப்பும் பணம் மற்றும் அய்யப்பனின் ஓய்வு ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர்.இக்கல்லறையை வேடிக்கை பார்க்க தினமும் பலர் வருகின்றனர்.'எல்லா வீடுகளிலும் அடுக்களை, சாமி அறை கட்டுவது போல கல்லறையும் கட்டியுள்ளேன்...' என்கிறார் அய்யப்பன். — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !