உள்ளூர் செய்திகள்

மூன்று நூற்றாண்டுகளை பார்த்தவர்!

ஜப்பானைச் சேர்ந்த, ஜிரொயுமான் கிமுராவுக்கு, இப்போது, 115 வயது. உலகின், மிக வயதான மனிதர் என்ற, கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் இவர் தான். ஏற்கனவே, தாமஸ் கிறிஸ்டியன் மார்டென்சன் என்பவர் தான், இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். இவர், 115 ஆண்டு, 252 நாட்கள் வாழ்ந்தார்.ஆனால், ஜிரொயுமான், சமீபத்தில், 115 ஆண்டு, 253 நாட்களை கடந்து, தாமசிடமிருந்து, சாதனையை, தட்டிப் பறித்துள்ளார். ஜிரொயுமான், 1897ல், பிறந்தவர். இதன் மூலம், மூன்று நூற்றாண்டுகளை பார்த்தவர், என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது.இவருக்கு, ஏழு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 14 பேரன், பேத்திகள், 25 கொள்ளுப் பேரன், பேத்திகள், 13 எள்ளுப் பேரன், பேத்திகள் என, இவரது சாதனை பட்டியல், நீண்டு கொண்டே செல்கிறது.'அதிக வயது வரை வாழும் ரகசியம் என்ன,' என, இவரிடம் கேட்டபோது, 'அளவோடு சாப்பிட்டால், வளமாக, நீண்ட காலம் வாழலாம்...' என, ரத்தினச் சுருக்கமாக பதில் அளிக்கிறார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !