உள்ளூர் செய்திகள்

100 வயது மனிதருக்கு இதய ஆபரேஷன்!

நூறு வயதான மனிதர் ஒருவருக்கு, இதயத்தில் பை-பாஸ் ஆபரேஷன் செய்து, புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.இத்தாலி நாட்டில் புளாரன்ஸ் நகரில், கேரகி என்ற மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்தது. 1911ம் ஆண்டு பிறந்த இந்த நபர், சிறுநீரக இயல் டாக்டராக தன், 80வது வயது வரை பணியாற்றி வந்தார். பிறகு, ஓய்வில் இருந்த அவருக்கு, சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு, இதயத்தில் அடைப்பு இருப்பதை உறுதி செய்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.பை-பாஸ் ஆபரேஷன் செய்து கொண்ட இந்த டாக்டர், இப்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆபரேஷன் செய்து கொண்ட டாக்டரின் பெயரை, மருத்துவமனை வெளியிட மறுத்து விட்டது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !