உள்ளூர் செய்திகள்

ஹாலிவுட் நடிகையின் விபரீத ஆசை!

இ.எல்.ஜேம்ஸ் என்பவர் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட, பிப்டி சேட் ஆப் கிரே என்ற படம், ஹாலிவுட்டில் வெளியாகி, சக்கை போடு போடுகிறது. இதனால், இப்படத்தின் கதாநாயகி டாகோட்டா ஜான்சன், பிரபலமாகி விட்டார். ஆனால், அவரை விட, அவர் சமீபத்தில் அளித்த பேட்டி தான், மிகவும் பிரபலமாகி விட்டது.'எனக்கு வித விதமான உள்ளாடைகள் அணிவதில் ரொம்ப ஆசை. அதனால், அழகான உள்ளாடைகளை பார்த்தால், உடனே திருடி விடுவேன். இப்படத்தில் நடித்தபோது, சக நடிகைகளின் உள்ளாடைகளை திருடி, ரகசியமாக அணிந்து, அழகு பார்த்தேன். அது, ஒரு த்ரில்லான அனுபவம்...' என, சிலிர்த்துள்ளார். இதைக் கேட்ட ஹாலிவுட் ரசிகர்கள், 'இந்த பொண்ணு உண்மையிலேயே லூசா... இல்லை லூசு மாதிரி நடிக்கிறதா...' என, மண்டை காய்ந்துள்ளனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !