வீட்டுத் தோட்ட குறிப்புகள்!
* வெயில் காலத்தில், அதிகாலையில் செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மாலையிலும் வெயில் தாழ்ந்த பின்னரே நீர் விட வேண்டும். இதனால், நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்* ரோஜா செடிகளுக்கு, வாழைப் பழத் தோலை நறுக்கிப் போட்டால், செடியும் நன்றாக வளரும்; செழிப்பான பூக்களும் பூக்கும்* செடிகளை சுற்றி ஆழமாக குழி வெட்டி, வீடு பெருக்கும்போது சேரும் குப்பைகளை, முக்கியமாக சிறு பேப்பர் துண்டுகள், சமையலறையில் வீணாகும் காய்கறிகள், காய்கறி தோல்கள் போன்றவற்றை அதில் நிரப்பி, மண்ணை போட்டு மூடலாம். அவை மக்கி சிறந்த உரமாக மாறிவிடும். மேலும், ஈரத்தன்மை காத்துக்கொள்வதால், கடுங்கோடையிலும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை செடிகளுக்கு தண்ணீர் விட்டால் போதும்* மிளகாய் செடியில், பூக்கள் பூத்திருக்கும்போது சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த தண்ணீரை செடியில் தெளித்தால், வண்டுகள் பூவை மொய்த்து, அத்தனை பூக்களும் காயாகி விடும்.