உள்ளூர் செய்திகள்

வீடு வீடாக பால் வினியோகிக்கும், மேயர்!

அரசியலில் பெரும் புள்ளிகளாக இருந்தாலும், எளிமையாக வாழ்ந்து, மற்ற மாநில அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர், கேரள அரசியல்வாதிகள்.விடியற்காலையில், ஸ்கூட்டரில் வீடு வீடாக சென்று, பால் பாக்கெட் போடும் இந்த அழகி யார் என்று அறிந்தால், கேரள அரசியல்வாதிகளின் சிறப்பு புரியும். இவரது பெயர், அஜிதா விஜயன்; திருச்சூர் மேயர்.'மக்களுக்கு உதவுவதற்காக தான், அரசியல் பணி. ஒரு போதும் சுயநலனுக்காக அரசியலை பயன்படுத்த மாட்டேன். உழைத்து வாழ வேண்டும்...' இது தான், இந்த மேயரின் பொன்மொழி. — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !