உள்ளூர் செய்திகள்

அரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்!

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், ஆண்டுதோறும் சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில், யார் அதிகமான சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுகின்றனரோ, அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பத்து லட்சம் ரூபாய் பரிசு தரப்படும். இந்தாண்டுக்கான போட்டி, சமீபத்தில் நடந்தது. போட்டியை காண்பதற்காக, 20 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.மசாலா தடவப்பட்டு, நன்றாக பொரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லெக் பீஸ்கள், தயாராக இருந்தன. மணி ஒலித்ததும், போட்டி துவங்கியது. இறுதியில் ஜப்பானைச் சேர்ந்த டகெரு கொபாயஷி என்ற இளைஞர், அரை மணி நேரத்தில், 337 லெக் பீஸ்களை, அசால்டாக உள்ளே தள்ளி, பரிசைத் தட்டிச் சென்றார். இதற்கு முன், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், 255 லெக் பீஸ்களை சாப்பிட்டு, சாதனை படைத்திருந்தார். தற்போது, அந்த சாதனையை, ஜப்பான் நாட்டு சாப்பாட்டு ராமன் தகர்த்து விட்டார். — ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !