செருப்பு துடைப்பதிலும் சாதனையா?
'என்ன சாதனை செய்யலாம்' என, ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின், பரபரப்பான சாலையில், சமீபத்தில், 800 பேர் குவிந்தனர். அனைவரும் வரிசையாக அமர்ந்து, தங்கள் ஷூக்களை கழற்றி, ஒரே நேரத்தில், பாலீஷ் போட துவங்கி விட்டனர். சிறிது நேரம் கழித்து, அனைவரும் கைதட்டி மகிழ்ந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள், இதைப் பார்த்து, பேந்த பேந்த விழித்தனர். விசாரித்தபோது, சாதனைக்காக, இவ்வளவு பேர், ஒரே நேரத்தில், பாலீஷ் போட்டது தெரியவந்தது. இந்த சாதனை, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறவுள்ளது. — ஜோல்னா பையன்.