உள்ளூர் செய்திகள்

இப்பவே இப்படியா?

அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்தவர்கள், சராசரியை விட குறைவான உயரம் உடையவர்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், அங்கும், உயரமானவர்கள், அதுவும், மிக உயரமானவர்கள் வசிக்கத் தான் செய்கின்றனர்.அவர்களில் ஒருவர் தான், 11 வயதே ஆன, ஜாங் ஜியு என்ற சிறுமி. சீனாவின் ஜினான் மாகாணத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் உயரம் என்ன தெரியுமா... 6 அடி, 7 அங்குலம்.பள்ளியில் படிக்கும் அந்த சிறுமி, உடன் படிக்கும் சக சிறுமியரை விட, பிரமாண்டமான உயரத்தில் இருப்பதால், வித்தியாசமாக தெரிகிறார். இந்த சிறுமியின் பெற்றோர், கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்.'இன்னும் வயது இருக்கிறது; வளர்ச்சியும் இருக்கிறது. அதற்குள், எவ்வளவு உயரத்தை இந்த சிறுமி எட்டுவாளோ தெரியவில்லை...' என, ஆச்சரியத்துடன் கூறுகின்றனர், இவளது பள்ளி ஆசிரியர்கள். - ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !