கலைக்கும் ஜாதி தடையாகுமா?
கலைகளை பயில, ஜாதி தடையாக இருக்குமா என்று கேட்டால், ஆம் என்கிறார், திருவனந்தபுரத்தை சேர்ந்த தனுஜா என்ற ஏழைப்பெண். இவருடைய கணவர், குடி நோயாளி என்பதால், இரு மகன்களுடன் வறுமையில் வாடினார் தனுஜா. அந்நிலையிலும், மூத்த மகன் நிதீஷை, கலை பயிற்சி நிலையமான, கலா மண்டலத்தில் சேர்த்தார். அங்கு, அவருக்கு ஜாதியின் பெயரால் பல தொல்லைகள் தந்து, ஒன்பது மாத பயிற்சிக்கு பின் வெளியேற்றியதுடன், 'இதை பற்றி பத்திரிகையாளரிடம் கூறினால், திருட்டு வழக்கில் ஜெயிலுக்கு அனுப்புவோம்...' என்றும் மிரட்டியுள்ளனர்.தற்சமயம், ஏ.ஆர்.ரஹ்மானின், 'கே.எம்.மியூசிக் இன்ஸ்டிடியூட்டில்' சேர்ந்து, டிரம்ஸ் கற்று வருவதுடன், கலை நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார் நிதீஷ்.இதற்கிடையில், செண்டை கலைஞரான தனுஜாவின் கணவர், குடிப்பழக்கத்தை விட்டு, தொடர்ந்து, 48 மணி நேரம் செண்டை மேளம் முழங்கி, பிரபலமானார். தற்போது, அவர், செண்டை பயிற்சி நிலையத்தை நிறுவி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.'வறுமையில் மூழ்கிய குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டேன்...' என்கிறார் தனுஜா.— ஜோல்னாபையன்.