கவிதைச்சோலை - வாய்ப்பாட்டு மனிதர்கள்!
விவசாயி என் நண்பன்பசி தீர்க்கும் மருத்துவன்இந்நாட்டின் முதுகெலும்பு என்றுவீர வசனம் பேசும்வாய் ஜால நண்பர்களே...வித்துக்கள் விதைத்தோவிளை நிலம் மிதித்தோகளைச்செடிகள் பறித்தோகை வேலைகள் செய்ததுண்டா!சேற்றில் இறங்கிசேவை செய்தோமண் தளத்தில் மரம் நட்டோமழைக்கு வித்திட்டதுண்டா!அறுவடை செய்து அளந்துவிட்டுகைக்கும் வாய்க்கும் எட்டாமல்கஞ்சித் தண்ணீர் குடித்த குடியானவனின்குறைகள் ஏதும் கேட்டதுண்டா!கடன் தொல்லை தாங்காமல்கண்ணீர் சிந்தும் விவசாயிக்குஉதவிக்கரம் நீட்டிஉள்ளம் தேற்றியதுண்டா!வேதனையிலும் விளைச்சல் உண்டாக்கிவிருந்து படைக்கும் விவசாயியிடம்விதைச்ச விளைச்சலுக்கு விலை கிடைத்ததாஎவரேனும் விபரம் கேட்டதுண்டா!வாடிப் போன பயிர் பார்த்துஓடிப்போயி உயிர் விட்ட விவசாயிக்குஉங்களின் பங்கு என்னவென்றுஎப்போதாவது யோசித்ததுண்டா!வாய்ப்பாட்டு பாடியேவளமான வாழ்க்கைக்குள் வட்டமிட்டு வருத்தம் தெரியாமல் வாழும்மாடி வீட்டு மனிதர்களே...விவசாயி வாழ்க என்றுவேஷமிட்டு கோஷம் போடும்முகமூடிக்கு பூட்டு போட்டுசேற்றில் இறங்கி நாற்று நட்டுநாற்றங்கால் வளர்க்கும்நடைமுறையில் தோள் கொடுத்தால்நஷ்டப்பட்ட விவசாயியும்இஷ்டப்பட்டு ஏர் பிடிப்பான்எல்லார் இதயங்களிலும் இடம் பிடிப்பான்!அ. ரேவந்த், எர்ணாகுளம், கேரளா.