உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - எப்போது நிறுத்துவான்?

நாற்காலியில் அமர்வதெல்லாம்தற்காலிகமானதென்றுஇயற்கை எப்போதும்அறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறது!மரக்கிளை நாற்காலியில்அமர்ந்திருக்கும்இலைகளுக்குத் தெரியும்இலையுதிர்காலத்தில்விழுந்துவிட வேண்டுமென!கோபுர நாற்காலியில்அமர்ந்திருக்கும்பறவைகளுக்குத் தெரியும்பசி கொண்ட வேளையில்பறந்துவிட வேண்டுமென!மலையின் நாற்காலியில்அமர்ந்திருக்கும்முகில்களுக்குத் தெரியும்மழையென ஒரு பொழுதில்இறங்கிவிட வேண்டுமென!பாடவேளை முடிந்ததும்வகுப்பறை நாற்காலியை விட்டும்இளைப்பாறல் முடிந்ததும்பூங்காவின் நாற்காலியை விட்டும்எழுந்துதானே ஆகவேண்டும்!ரயில் வந்ததும்நடைமேடை நாற்காலியிலிருந்தும்விழா முடிந்ததும்அரங்கத்தின் நாற்காலியிலிருந்தும்இறங்கித்தானே ஆகவேண்டும்!எங்கேயும், யாரும்நிரந்தரமாய் எப்போதும்அமர்ந்திருக்க முடியாதெனகாலம் சொல்லிக்கொண்டேஇருக்கிறது!மனிதன் தான் எப்போதுநிறுத்துவான் எனப்புரியவேயில்லை...பதவி நாற்காலியில் அமர்ந்ததும்இது நிரந்தரமென நினைத்துதலை, கால் புரியாமல்ஆடுகிற ஆட்டத்தை!என். கீர்த்தி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !