உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - அழுகை எதற்கு ?

* அழுகை...* அது...சொந்தக் காலில்லாதசோம்பேறி மனிதர்கள்கண்களால் ஆடும்கோலி விளையாட்டு!* அழகான முகத்தைஅலங்கோலப்படுத்தஅவர்களாகவேஅவர்கள் மேல் எறியும்ஆசிட் வீச்சு!* சோகம் காட்டிசுகம் பெறலாமென்றசூட்சுமக்காரர் எண்ணங்களின்சுய விளம்பரம்!* ஒவ்வொரு நிகழ்வுக்காகவும்ஒப்பாரி வைக்கும்உதவாக்கரை மனிதனே...உன் நிலைக்காகஒருமுறையாவதுஓலமிடுவாயா?* ஏனென்றால்...நீயே கூட ஒருநடை பிணம் தானே!* பிணத்தின் மீதுவிழுகிற துளிகளே...ஒருவன் வாழ்ந்ததற்காககிடைக்கிற விருதுகள்!* ஆகையால் தான்மனிதனே...அடுத்தவர் கண்கள்அழுகிற நீரைவாழ்கிற வரையில்வழித்துத் துடைத்தெறி!* கண்களிலிருந்துகழன்று விழுகின்றனவேஅவைகள்கண்ணீர்த் துளிகளா?இல்லை —* முறிந்து விழும்முயற்சிகள்...* கருகிச்சாயும்கனவுகள்...* வியர்வைத் துளிகளின்விரோதிகள்!* உழைத்து உழைத்துவாழ்வில் உயரஇரு கை இருப்பதைஉணர்ந்துவிட்டால்அழுகை ஏன்அவசியப்படுகிறது நண்பனே?— எல்.பிரைட், தேவகோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !