எட்டு மாத கர்ப்பிணியின் அதிரடியான, கிக்பாக்சிங்!
லண்டன் நகரைச் சேர்ந்தவர், கிறிஸ்டல் க்ரீன் என்ற பெண், வயது: 31. இவர், 'கிக்பாக்சிங்' என, அழைக்கப்படும், கால்களால் உதைக்கும் சண்டையை கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவர், தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனாலும், அதற்காக, தன் பயிற்சியை நிறுத்தவில்லை. மற்றவர்களுக்கு, 'கிக்பாக்சிங்' குறித்து, தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதுடன், சில நேரங்களில், போட்டிகளிலும், தானே அதிரடியாக களமிறங்கி, எதிரிகளை, பெண்டெடுக்கிறார். அவர் கூறுகையில்,'கர்ப்பமாக இருக்கும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது, நன்றாகவே தெரியும். எனவே, மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான், பயற்சி அளிக்கிறேன்...' என்கிறார். -- ஜோல்னா பையன்.