சமையலறை குறிப்புகள்!
இட்லி மாவு நீர்த்து போய்விட்டால், சிறிது ரவையை கலந்து, அரைமணி நேரம் ஊறிய பின், இட்லி வார்க்கலாம். மாவில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி வார்த்தால், மிருதுவாக இருக்கும்* வீட்டில் செய்யும் பூரி, பொரித்ததும், மொறுமொறுப்பாக, உப்பலாக இருந்தாலும், சிறிது நேரத்தில் அமிழ்ந்து விடும். கோதுமை மாவுடன் சிறிது ரவை சேர்த்து பிசைந்து பூரி செய்தால், மொறுமொறுப்பாகவும், உப்பலாகவும் இருக்கும்* சூடான பதார்த்தம், ரசம் ஆகியவற்றில், எலுமிச்சை சாறு சேர்க்கு முன், சிறிது ஆற விட வேண்டும். ரசம் கொதிக்கும் நிலையில் எலுமிச்சை சாறு பிழிந்தால், கசந்து விடும்.