உள்ளூர் செய்திகள்

கொல்லி மலையா, ஆட்கொல்லி மலையா!

படத்தில் உள்ள அழகிய இயற்கை காட்சி, வெளிநாட்டில் எடுக்கப்பட்டது இல்லை. நாமக்கல்லில் உள்ள கொல்லிமலை தான், இது.கடல் மட்டத்திலிருந்து, 4,300 அடி உயரத்தில் உள்ள கொல்லி மலைக்கு, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். அரிய மூலிகை செடி வகைகள் நிறைந்த இந்த மலைக்கு, கொல்லிமலை என்று பெயர் வர காரணம், சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டப்படும், கொல்லி தேவி தான். ஆனால், வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, அந்த காலத்தில், வாகன வசதிகள் இல்லாதபோது, மிகவும் சிரமப்பட்டு மலை ஏறுவது, தற்கொலைக்கு சமமானது. அங்கு செல்பவர்களால் எளிதில் உயிருடன் திரும்புவது கஷ்டம். எனவே தான், ஆட்கொல்லி மலை என்றும் சொல்வதுண்டு.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !