உள்ளூர் செய்திகள்

உயிர் காப்பான் தோழன்!

'உயிர் காப்பான் தோழன்' என்பதற்கிணங்க, அபிஜித் என்ற தன் தோழனின் உயிரைக் காப்பாற்றியுள்ளான், செபாஸ்டியன் என்ற பள்ளி மாணவன்.அன்று, கேரள மாநிலம், ஆலப்புழா - மங்கலம் ரயில்வே, 'கேட்' மூடப்பட்டு இருந்தது. அப்போது, மாணவர்கள் சிலர், தண்டவாளத்தை கடந்தனர். இந்நிலையில், ரயில் வரும் சத்தம் கேட்க, பதற்றத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற, அபிஜித், கீழே விழுந்து விட்டான். அவன் மீது சைக்கிள் விழுந்தது. ரயில் நெருங்கி வருவதை கண்ட செபாஸ்டியன், தண்டவாளத்தில் குதித்து, சைக்கிளை இழுத்து, அவன் தோளில் இருந்த ஸ்கூல் பையை பிடுங்கி எறிந்து, கைகளை பற்றி இழுத்து, தண்டவாளத்தை கடந்து, இருவரும் கீழே விழ, ரயில் அவர்களை கடந்தது. செபாஸ்டியனின் இந்த தைரியம், அவனை கதாநாயகன் ஆக்கியது. அடுத்தநாள், அவனுக்கு பாராட்டுகள் குவிந்தன. நல்ல உள்ளம் படைத்தவர்கள், ஆயிரக்கணக்கில் பரிசளித்து பாராட்டினர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !