உள்ளூர் செய்திகள்

லாலிபேல் கல் சர்ச்சுகள்!

எத்தியோப்பியாவில், லாலிபேல் என்ற இடத்தில், மலைகளை குடைந்து உருவாக்கிய, 11 கல் சர்ச்சுகள் இருக்கின்றன. இதற்கு, ஒரு கதை கூறுகின்றனர். அது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், செக்வா வம்ச மன்னன் லாலிபேல், பாம்பு கடித்து மரணமடைந்து, சொர்க்கத்துக்கு போனானாம். அங்கே, கடவுள் சொர்க்கத்தை சுற்றி பார்க்க அழைத்து சென்ற போது, கல்லில் செதுக்கப்பட்ட, 11 சர்ச்சுகள் இருந்தனவாம்; அதைப் போன்று, 11 தேவாலயங்களை பூமியில் அமைக்க சொல்லி, லாலிபேல் பூமிக்கு திருப்பி அனுப்பபட்டானாம்.பூமிக்கு திரும்பிய அரசன், மலைகளை குடைந்து, தேவாலயங்களை உருவாக்கினான். 24 ஆண்டுகள் இரவும், பகலும் ஏராளமான கலைஞர்கள் உழைத்து, இந்த சர்ச்சுகளை உருவாக்கியதாக, இங்குள்ள முதியோர் கூறுகின்றனர். இந்த இடத்துக்கு, மன்னன் லாலிபேல்லின் பெயரையே சூட்டியுள்ளனர்.- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !