நீளமான திருமண கவுன்!
திருமணத்திற்காக, கிறிஸ்துவ மணமகள் அணியும் வெள்ளை நிற கவுனின் பின்புற வால் பகுதி சற்று நீளமாக இருக்கும். கவுனின் வாலை, உறவினர்களின் குழந்தைகள் பிடித்தபடி வருவர்.இவ்வுடையின் பின்புற வால் பகுதியை, 2 லட்சம் அடி நீளம் கொண்டதாக வடிவமைத்து, சாதனையை செய்துள்ளார், ஒரு தையல் கலைஞர். கடந்த, டிச., 9, 2017ல், பிரான்ஸ் நாட்டின், காடிரை என்ற இடத்தில், மணமகளின் விருப்பப்படி, இரு மாதங்களில், 15 உதவியாளர்களுடன் இணைந்து, இந்த சாதனையை புரிந்துள்ளார்.— ஜோல்னாபையன்.