மேஜிக் வீடு!
உலகில் பல வடிவங்களில் வீடுகள் வந்தாலும், சில வீடுகள் மட்டுமே உலகளவில் பேசப்படுகின்றன. அவற்றில் இரண்டு வீடுகள், மிகவும் வித்யாசமானவை.கல் வீடு: போர்ச்சுகல் நாட்டில், பேப் மலையில் உள்ள வீடு, 'கல் வீடு' என்று, அழைக்கப்படுகிறது. அடுத்தடுத்த நான்கு பெரிய பாராங்கற்களுக்குள், இரண்டு அடுக்குகளாக, இயற்கை சூழலில் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே அனைத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக, குளிர்காய தீ மூட்டும் இடம் முதல் நீச்சல் குளம் வரை உள்ளது.கிளிஞ்சல் வீடு: மெக்சிகோவில், கிளிஞ்சல் வடிவில், ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. புகழ் பெற்ற கட்டட கலைஞர் ஜாவீர் சோனாசியான் என்பவர் இவ்வீட்டை வடிவமைத்துள்ளார். வெளியே கரடு முரடாக தோன்றினாலும், உள்ளே சென்றால் எல்லாம், 'வழவழா' தான். வட்ட வடிவில் மாடிப்படிகள், இயற்கை தாவரங்கள் என, அனைத்து நவீன வசதிகளும் இந்த கிளிஞ்சல் வீட்டில் உள்ளன.— ஜோல்னாபையன்.