உள்ளூர் செய்திகள்

மாங்காய் - கொத்தமல்லி சட்னி!

தேவையான பொருட்கள்:மாங்காய் - 1பச்சை மிளகாய் - 2கொத்தமல்லி தழை - 1 கப்புளி - கொட்டைப்பாக்கு அளவுஎண்ணெய், கடுகு, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: மாங்காயை தோல் சீவி துருவவும். புளியை சிறிதளவு நீரில் ஊற வைக்கவும். கொத்தமல்லி தழையை சுத்தம் செய்யவும். மாங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு, புளி மற்றும் கொத்த மல்லி தழையை, மிக்சியில் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, சட்னியாக அரைக்கவும். சிறிதளவு எண்ணெயில், கடுகு, பெருங்காயத்துாள் தாளித்து, சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !