உள்ளூர் செய்திகள்

10 ரூபாய்க்கு மீன் விற்கும் மவராசன்...

ஒரு கிலோ மீன், 800 மற்றும் 1,000 ரூபாய் என்று விற்கும்போது, கேரளாவில் ஒருவர், 10 ரூபாய்க்கு மீன் விற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? கோழிக்கோடு, ஒளவண்ண கிராமத்தை சேர்ந்த ராமேட்டன் தான், அந்த அற்புத மனிதர். தினமும் கடற்கரைக்கு சென்று மீன்களை வாங்கி, சைக்கிளில் வைத்து ஊர் முழுவதும் சென்று வியாபாரம் செய்கிறார். 'இப்படி குறைந்த விலைக்கு விற்கிறீர்களே...' என்று கேட்டால், 'அதிக பணம் எதற்கு... மனைவி, மகன் இருவரும் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர்; அதுவே எங்களுக்கு போதுமானது...' என்று சிரித்தபடி கூறி, அடுத்த வாடிக்கையாளரை நோக்கி தன் சைக்கிளை உருட்டுகிறார், ராமேட்டன். மற்றவர்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எப்படி தன் பாக்கெட்டுக்கு வரவழைப்பது என்று யோசிப்பவர்கள் மத்தியில், இவர் உயர்ந்து நிற்கிறார்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !