மாஜி அழகிக்கு ஏற்பட்ட பரிதாபம்!
அமெரிக்காவைச் சேர்ந்தவர், கிறிஸ்டா மெக்கென்னா; தற்போது, இவருக்கு, 60 வயதாகிறது. 1970களில், அமெரிக்காவில், இவர், மிகப் பிரபலம். புகழ் பெற்ற, 'பிளேபாய்' பத்திரிகைக்கு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, அன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர். அதேபோல், உடலை, வில்லாக வளைத்து, உடற்பயிற்சி செய்வதிலும் கெட்டிக்காரர். இத்தனை பெருமை இருந்தும் என்ன பயன்? இப்போது, அமெரிக்க வீதிகளில், பிச்சை எடுக்கிறார். தனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என, அவருக்கே தெரியவில்லையாம். ஒரு காலத்தில், தன் அழகை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்கு பயன்பட்ட உடற்பயிற்சியை, தற்போது, பிச்சை எடுக்க பயன்படுத்துகிறார், இந்த மாஜி அழகி.— ஜோல்னாபையன்.