மழைக்காலம் வந்தாச்சு!
மழைக்காலம் ஆரம்பமாகி விட்டது. முன்னெச்சரிக்கையாக என்னென்ன செய்யலாம். வாருங்கள் பார்ப்போம்.முக்கியமான ஆவணங்கள், படிப்பு சான்றிதழ்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை, வங்கி லாக்கரில் வைத்து விடுங்கள். பேப்பர் டாக்கு மென்ட்களை போட்டோ காப்பி எடுத்து, வீட்டில், தண்ணீர் புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பாதுகாப்பாக வைக்கவும்* முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாத உலர் மளிகைப் பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைக்கவும் * கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்தால், மருத்துவமனை அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்யலாம் * ரெயின்கோட், லைப் ஜாக்கெட் அவசியம். வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி மேடான இடத்தில் நிறுத்துங்கள் * தரமான எமர்ஜென்சி லைட்டை, சார்ஜ் செய்து வையுங்கள். கூடுதலாக ஒரு மொபைல் போனும், 'பவர் பேங்க்' ஒன்றும் சார்ஜ் செய்து வைக்கவும்* அவசர தேவைக்கு வீட்டில் குறைந்தபட்ச பணம் வைத்திருங்கள் * வீட்டை சுற்றிப் போட, பிளீச்சிங் பவுடர் வாங்கி வையுங்கள். அதன் நெடிக்கு, பூச்சிகள், தவளை, பாம்பு வராது * தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள், மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும் தெருவில் அளவுக்கு அதிகமாக மழை நீர் தேங்கினால், வீட்டு வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கவும் * மின்துறை மற்றும் எலக்ட்ரீஷியன், டாக்டரின் போன் எண்களை கைவசம் வைத்திருக்கவும் * வீட்டின் முன் பக்கமும், பின்புறமும் உள்ள கதவுகளில், தரைக்கும் கதவுக்கும் இடையே இடைவெளி இருந்தால், மரப்பலகை இணைத்து, தண்ணீர் உள்ளே வராமல் பாதுகாக்கலாம்* தோட்டம் வைத்துப் பராமரிப்பவர்கள் வீட்டைச் சுற்றிலும், சிறிய கால்வாய்களை வெட்டி, மழை நீரை தோட்டம் பக்கம் திருப்பி விடலாம்* ஒவ்வொருவரும் நம் கடமையை உணர்ந்து, வீட்டைச் சுற்றி குப்பைக் கழிவு இல்லாமல், துாய்மையைக் கடைப்பிடிப்பது அவசியம்.முக்கியமாக அக்கம்பக்கத்தில் நல்லுறவுடன் இருந்தால், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும். ---------- மழைக்காலத்தில் மர ஜன்னல்கள் கதவுகளில் ஈரம் பட்டு சரியாக திறக்கவும், மூடவும் முடியாது. இதைத் தடுக்க, கார்ப்பென்டர்கள் உபயோகிக்கும், 'தேன் மெழுகை' வாங்கி, கதவு ஓரங்களில் மேலிருந்து கீழாக அழுத்தித் தேய்க்க வேண்டும்.இப்படி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், கதவுகளை சுலபமாக திறக்கவும், மூடவும் முடியும். தேன் மெழுகு கிடைக்காவிட்டால், சாதாரண மெழுகையும் தேய்க்கலாம். - என். ஜெயவர்ஷினி