உள்ளூர் செய்திகள்

இனி, கூந்தல் உதிர்ந்தால் கவலைப்பட வேண்டாம் !

சீனாவைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியை, ஷியாங். இவருக்கு, அடர்த்தியான, கூந்தல் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், அவரின் கூந்தல் உதிர துவங்கியது. இதற்காக கவலைப்படாமல், உதிர்ந்த முடிகளை எல்லாம், வீணாக்காமல், சேர்த்து வைத்தார். சமீபத்தில், அந்த முடிகளால், அழகிய மேலாடையையும், தொப்பியையும் தயாரித்து, அசத்தியுள்ளார்.'என் அடர்த்தியான கூந்தல் மீது, பலருக்கும் பொறாமை. என் கூந்தல் உதிர்ந்தபோது, இந்த வயிற்றெரிச்சல் கோஷ்டி, சந்தோஷப்பட்டது. அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே, உதிர்ந்த முடிகளை எல்லாம் சேகரித்து வைத்து, இந்த புதுமையான உடையை வடிவமைத் தேன். இதற்காக, 11 ஆண்டுகளாக, முடிகளை பத்திரமாக பாதுகாத்து வந்தேன். மேலாடை தயாரிப்பதற்கு, 89, 112 முடிகளும், தொப்பி தயாரிப்பதற்கு, 29,496 முடிகளும் தேவைப்பட்டன...' என்கிறார், ஷியாங்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !