சாதிக்க வயதில்லை!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஜோக்ரி என்ற கிராமத்தை சேர்ந்தவர், 82 வயதான சாட்ரோ. இவர், தன் பேரக் குழந்தைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவதை வேடிக்கை பார்த்து வந்தார். பாட்டி ஆர்வத்துடன் கவனிப்பதைக் கண்ட பயிற்சியாளர், அவருக்கும் துப்பாக்கிச் சுட கற்றுக் கொடுத்து, 'துப்பாக்கி சூடு பயிற்சி ஷூட்டிங் கிளப்' உறுப்பினரும் ஆக்கினார். இன்று, இவரை தோற்கடிக்க, ஆளே கிடையாது. எங்கு போட்டி நடந்தாலும், துப்பாக்கியுடன் கிளம்பி விடும் சாட்ரோ பாட்டி, முதல் பரிசை வாங்காமல் திரும்பியதில்லை.— ஜோல்னாபையன்.