யோகா சிகிச்சையில் கன்னியாஸ்திரி!
கேரள மாநிலம், மூவாற்று புழா மெடிக்கல் மைய மருத்துவமனையில், நோயாளிகளுக்கு, யோகா சிகிச்சை செய்து வருகிறார், 66 வயது, கிறிஸ்துவரான, சிஸ்டர் இன்பான்டட்ரிசா. ஒருமுறை, உடல்நலம் பாதிக்கப்பட்டார், இன்பான்டட்ரிசா. மருத்துவ சிகிச்சை எடுத்தும், குணமடையாத நிலையில், மலையாள செய்திதாளில் வெளிவந்த, யோகா தொடர் கட்டுரை தான் இவரை யோகா செய்ய துாண்டியது. 'மருத்துவம் தோற்றபோது, யோகாவால் குணமடைந்தேன்; அதனால், தற்போது, யோகா பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். யோகாவில், 84 ஆயிரம் ஆசனங்கள் இருந்தாலும், நடைமுறையில், 84 ஆசனங்கள் தான் உள்ளன...' என்கிறார். யோகா செய்ததன் மூலம் உடல்நலம் தேறிய இவர், யோகாவை மற்ற நோயாளிகளுக்கும் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குணப்படுத்தி வருகிறார். தினமும், இவரை தேடி, ஏராளமான நோயாளிகள் வருகின்றனர்.- ஜோல்னாபையன்.