கவிதைச் சோலை!
காதல் கணவன்!* முதல் பார்வையிலேயேஎன்னை உன் பக்கம்ஈர்த்தவனே...புரிந்து கொண்டேன்நீ எனக்கானவன்என்று!* என் கரம் பற்றிஉன்னை காதலிக்கிறேன்கண்ணே என்றவனே...புரிந்து கொண்டேன்என் கைத்தலம் பற்றபோகிறவன் நீதானென்று!* உன்னைப் பார்க்காமல்நொடிப் பொழுதும்இருக்க முடியாததால்நாள் பார்த்து,மங்கள நாண் பூட்டி,மனைவி ஸ்தானத்தைதந்ததும் எப்படி மறந்தாய்?* அன்பான அரவணைப்புகளையும்மனதைத் தொடும்பேச்சுக்களையும்...* வேலை நேரத்திலும்போன் செய்து சாப்பிட்டாயாஎன்ற கரிசனங்களையும்...* மறக்காது நீவாங்கி வந்து சூடிவிடும்மல்லிகையையும்...* இந்த சேலையில்நீ தேவதை என்றவர்ணிப்புகளையும்...* உன் கையால்செய்த உணவு அமிர்தம்என்ற பாராட்டுகளையும்...* பிறந்த நாளை மறக்காதுமுத்தத்துடன் நீதரும் பரிசுகளையும்...* வீட்டினுள்ளேயே அடைந்துகிடக்கிறாயே... வாயேன்காற்றாட பேசிக்கொண்டுநடந்துவிட்டு வரலாம்எனற பரிவுகளையும்...* எப்படி மறந்தாயென்றுஇன்றளவும் என்னால்புரிந்து கொள்ள முடியவில்லை!* என் காதல் கணவனே...காதலிக்கும் போது மட்டுமல்ல,திருமணத்திற்கு பின்னும்நீ என்னைகாதலித்துக் கொண்டிருப்பதையேவிரும்புகிறேன்!— ஆர்.சத்யா ராஜசேகர், கோயம்புத்தூர்.