உள்ளூர் செய்திகள்

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!

சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதால், 'தூய்மையான காற்றையே சுவாசிக்க முடியவில்லை...' என, ஏக்கத்தில் தவிப்போருக்கு தீர்வு வந்து விட்டது.சுவிட்சர்லாந்து நாட்டில், ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தூய்மையான காற்றை, பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது, ஒரு நிறுவனம். 1 லிட்டர் கொள்ளளவு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்று, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இது, அரை லிட்டர் பாட்டிலிலும் கிடைக்கிறது. அதிகமாக வாங்குவோருக்கு, விலையில் தள்ளுபடி உண்டாம்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !