உள்ளூர் செய்திகள்

தனிமையில் இனிமை காண்பவர்!

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கடமக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்டது, முறிக்கல் தீவு. கொச்சி நகருக்கு அருகில் உள்ள இத்தீவில், கடந்த, 12 ஆண்டுகளாக தன்னந்தனியாக, வாழ்ந்து வருகிறார், 64 வயது ஜோசப்.உடன் பிறந்தோர் இருவர் இருந்தும், அவர்களுடன் வாழாமல், தீவில், தனக்கு சொந்தமான, 64 சென்ட் நிலத்தில், காய்கறிகளை பயிரிட்டும், மீன் பிடித்தும், தன் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார். அத்துடன், மீதமுள்ள காய்கறிகள், மீன்களை தன் சிறு படகில் எடுத்துச் சென்று, கொச்சியில் விற்று, தனக்கு தேவையான மற்ற பொருட்களை வாங்குகிறார்.சமீபகாலமாக, இவரை பற்றி கேள்விப்பட்ட சுற்றுலா பயணிகள், இந்த குட்டி தீவுக்கு சென்று வருகின்றனர்.- ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !