பிப்பாவுக்கு பயங்கர கிராக்கி!
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கும், கேதே மிடில்டனுக்கும் நடந்த திருமண நிகழ்ச்சியை, 'டிவி'யில் பார்த்திருக்கிறீர்களா? அப்படியானால், கேதே மிடில்டனின் தங்கையை, அதாவது, இளவரசர் வில்லியம்சின் மைத் துனியையும் கட்டாயமாக பார்த்திருப்பீர்கள். திருமணம் நடந்த அரங்கிற்குள், கேதே மிடில்டன் ஒய்யாரமாக நடந்து வந்த போது, அவரது உடையை தூக்கிக் கொண்டு, அவரின் பின்னால், புன்னகையை தவழவிட்டபடி நடந்து வந்தாரே, ஒரு இளம் பெண். அவர் தான் கேதேவின் தங்கை, பிப்பா மிடில்டன், 27.இந்த நிகழ்வு, 'டிவி'களில் ஒளிபரப்பானதால், ஒரே இரவில், உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார், பிப்பா. அவர் எங்கு சென்றாலும், கூட்டம் கூடி விடுகிறது. பிரிட்டன் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நபராகி விட்டார்.இவரது அக்கா கேதே, பிரிட்டன் இளவரசி ஆகி விட்டதால், பிப்பாவும் அரச குடும்பத்தில் ஒரு அங்கமாகி விட்டார். இதனால், இவரின் பாதுகாப்பு கருதி, குண்டு துளைக்காத காரை அவருக்கு வழங்க, பிரிட்டன் ராணி முடிவு செய்துள்ளார். இந்த காரின் விலை, எழுபது லட்ச ரூபாயாம். 'கொடுக்கிற தெய்வம், கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்...' என்பது இதுதானோ!இளவரசர் வில்லியம்சின் தம்பி ஹாரி, பிப்பாவை, 'ல்வ்'வுவதாக பிரிட்டன் மீடியாக்கள் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன என்பது தான், இந்த விவகாரத்தில், ஹை-லைட்டான விஷயம்.— ஜோல்னா பையன்.