கவிதைச்சோலை!
காதல் பயணம்!* அன்பே...உன் பார்வைதான்என் காதல் பயணத்தின்முதல் தொடக்கம்!* எந்த பக்கம்பார்த்தாலும்என் மீதானஉன் காதலின்அறிகுறிகள்...ஆதலால்,நீ வரும் பாதை பார்த்துதொடங்கி விட்டேன்என் காதல்பயணத்தை!* வழியில்பலவிசித்திர மனிதர்கள்...பார்வைகள்...கேள்விகள்...எனினும்,தொடங்கிய பயணத்தைபாதியில் நிறுத்த முடியாது... இது நமக்கானகாதல் பயணம்மட்டுமல்லவாழ்க்கைப் பயணமும் கூட!* தொலைதூர பயணம் தான்இருந்தும் பரவாயில்லைதூரம் தெரியாதுகாரணம்,உன் நினைவுகள்துணை வருவதால்!* எங்கும் நிற்காதுசெல்லும்இந்த காதல் பயணம்!* இனி,உன்னோடு சேர்ந்துநானும்வாழ்நாள் முழுவதும்பயணித்துக் கொண்டேஇருப்பேன்!* ஏனெனில்,வாழ்ந்தாக வேண்டுமே...எனக்கான வாழ்க்கையைஉன்னோடு நான்!— எம்.கார்த்திக் மாதவன், சிதம்பரம்.