கவிதைச்சோலை!
வாழ்க்கை எனும் பள்ளியிலே...* அடிமேல் அடி விழுந்த போதிலும்வாழவே ஆசைப்படுகிறேன்...வெட்ட வெட்ட துளிர் விடும்மரங்களைப் போல...* சக மனிதர்களின் அனுபவங்களிலிருந்தும்பாடங்களை கற்றுக் கொள்கிறேன்...மலருக்கு மலர் சென்றுதேன் சேகரிக்கும் தேனீக்களைப் போல...* அவதூறுகளையும், புறக்கணிப்புகளையும்பொறுத்து வாழவே விரும்புகிறேன்...தன்னைத் தோண்டுபவரையும் விழாமல்தாங்கும் பூமியைப் போல...* ஆர்ப்பரிக்கும் கடலலை எனஎண்ணங்கள் ஆரவாரம் செய்த போதிலும்...மோன நிலை பழகுகிறேன்ஆழ்கடல் அமைதி போல...* உணர்வுகள் காயப்படும் போதெல்லாம்உடைந்து போனாலும்உயிர்த்தெழவே விழைகிறேன்மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்பீனிக்ஸ் பறவையைப் போல...* வாழ்க்கை எனும் பள்ளியிலேமாணவனாகவே இருந்திடஆர்வம் கொள்கிறேன்...அற்புத பாடங்களை அனுபவங்களாகதந்து கொண்டிருக்கும்இயற்கையோடு இயற்கையாக...— எம். காந்திமதி கிருஷ்ணன், சென்னை.