கவிதைச்சோலை!
கனவாய் போனது!* பார்த்தேன்...அவளும் பார்த்தாள்பற்றிக் கொண்டதுகாதல் தீ!* அசினையும், த்ரிஷாவையும்அவளில் கண்டேன்...அஜித்தையும், விஜயையும்என்னில் கண்டாள்!* ஒருவரை ஒருவர்காதலித்தோம்...ஓர் உயிர் ஈருடல் எனமயங்கி நின்றோம்!* உள் முகத்தைஒளித்து வைத்துபொய் முகத்தை புகழ்ந்து கொண்டோம்!* கல்யாணமும் கூடி வந்தது...கருத்து மோதலும்கூடவே வந்தது!* ஏராளமான எதிர்பார்ப்புகள்இருவருக்குள்ளும்... எடுத்துக் கொடுக்கஇருவருக்கும் தோன்றவில்லை!* ஆறு வருடம் காதலித்தும்அவளை நான் அறியவில்லை...அவளுக்கோ என்னைபுரியவில்லை!* வார்த்தை அம்புகளால்வாழ்க்கை...வழக்காடு மன்றமானது!*காதலித்த காலம்கனவாய் போனதுகல்யாண வாழ்க்கைஇன்று...கசப்பாய் ஆனது!— ச.முருகதாஸ், கோட்டூர்.