கவிதைச்சோலை!
காதலே... நீ வாழ்க!* கண்ணிலே புகுந்துகருத்திலே கலந்துகள்ளத்தனங்கள்பல செய்வாய்!* மண்ணிலே பிறந்தமுதல் மனிதனோடுகாதலே நீயும்உடன் பிறந்தாய்!* எண்ணிலா மொழிகள்பிறந்திடும் முன்னேமொழிகளுள் நீயேமுதலா# பிறந்தாய்!* பெண்ணின் விழியில்போதையாய் கலந்துமண்ணிலே சொர்க்கத்தைநீ சமைத்தாய்!* ஒவ்வொரு படைப்பின்உள்ளுக்குள்ளும்ஒலித்திடும்உயிரின் ராகமே!* எவ்விதம் அரும்பி,எவ்விதம் மலர்வாய்...எண்ணிடகாலம் போகுமே!* செதுக்கும் சிற்பிகள்செத்துப் போனாலும்சிலைகள்உலகினில் வாழுமே - உனை* ஒதுக்கும் மனிதர்கள்உன்னை வெறுத்தாலும்உலகுள்ளவரைஉன் புகழ் வாழுமே!— கு.மா.பா.கபிலன், சென்னை.