கவிதைச்சோலை!
புன்னகை!* நம்மில் சிதறும்புன்னகைகள்நமக்கே தெரியாமல் வீடெங்கும்பட்டுத் தெறிக்கையில்ஆனந்தம் -அணைதாண்டிப் பாய்கிறது!* என்று நினைத்தாலும்மகிழ்ச்சி நிகழ்வுகளின் பதிவுகள் நித்தமும் புன்னகைப்பூவை மலரவே செய்கின்றன!* பாசத்தில்கட்டுண்டோமானால்,இதுவே பேரானந்தஉணர்வுகளின் ஊற்றாகிறது!* இதை,நோய்வாய்ப்பட்டவர்களுக்கும்சோகம் சுமப்பவர்களுக்கும்ஏன் - நம்மைவெறுப்பவர்களுக்குங்கூடபரிசளிக்கலாம்!* நமக்குள்ளே நிகழும்சூழ்நிலைச் சிக்கல்களுக்கும்துளிராத ஆசைகளுக்கும்முறிந்துபோன முயற்சிகளுக்கும்புன்னகையொன்றேபண்படுத்தும் மருந்து!* உடனடித் தேவைகளுக்கும்திடீர் சோகங்களுக்கும்பழைய புன்னகையைக்கூடதூசுதட்டித் துடைத்துக்கொடுத்தாலும் புன்னகையின்நிறம் மாறுவதில்லை!* மாறாக...பல்லாண்டுப் பகையையும்நம் மனம்விட்டுக்கிள்ளியெறிந்து விடும்!* எரியும் எந்த பகைமைக்கும்,முள்ளாய் குத்தும்துரோகங்களுக்கும்புன்னகையின் பார்வைகள்காதலாய்கசிந்துருகச் செய்யும்!* புன்னகைகண நேரத்தில் காதலைமுகிழ்க்கச் செய்யும்...கவலைகளைக்கரையச் செய்யும்...வாழ்வை ரசிக்கச் செய்யும்!* புன்னகைக்கும் வித்தைமட்டும் புரிந்து கொண்டால்இந்த உலகில் - நாம்கண்ணசைவில் காரியங்கள்யாவும் சாதித்து விடலாம்!— செல்லம் ரகு, திருப்பூர்.