கவிதைச்சோலை!
அப்படியேதானிருக்கிறது!* அப்படியேதானிருக்கிறது...எல்லாமும் இன்னமும்அப்படியேதானிருக்கிறது!* அமர்ந்து பேச நமக்குசிம்மாசனமிட்ட ஆலமரத்து வேர்!* வியர்க்கிற போதுநாம் கேட்காமலேயேவேகமாய் விசிறிவிட்ட மரக்கிளைகள்!* நீருக்குள் தொங்கவிட்டஉன் பாதத்தைதொட்டுவிட்ட சேதியைசொல்லி மகிழ்ந்தாட”ழித்தோடும் வடவாற்று வெள்ளம்!* கால்கொலுசைகண்டுவிட்ட களிப்பில்நீருக்குமேலாய் துள்ளிக் குதிக்கும் சிறுகெண்டை!* அப்படி என்னதான் பேசிக் கொள்கின்றனர்?என ஒற்றறியதினமும் வந்தமரும் ஜோடிக்கிளிகள்!* முக வசீகரத்திலோஉன் வார்த்தையின் அழகிலோ மயங்கிபழந்தின்ன மறக்கும் மைனாக்கள்...* எனக்கு தெரியாமல்உன்னை ரசித்துவிடஇலைகளினூடேதிருட்டுத்தனமாய் எட்டிப்பார்க்கும்மாலை நேர சூரியன்!* எல்லாமும் இன்னும்அப்படியேதானிருக்கிறது...* காலச்சூழலின் கோரப்பிடியில்நம் காதல் கைகூடாதென உணர்ந்த வேளையில்...சடசடவென முறிந்து விழுந்துசருகுகளோடு சருகுகளாய் சலனமற்று கிடக்கும்நம் இதயங்களுந்தான்!— ஞானதாசன், கடலூர்.