உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காத்திருக்கிறேன் தோழி!* ஒரு தாயின் வயிற்றில்பிறக்கவில்லை!* உறவென்ற பந்தமும்நமக்குள் இல்லை!* எங்கிருந்தோ வந்தாய்என் அருகில் அமர்ந்தாய்!* இதழ் விரிந்த சிரிப்பில்இதயத்தை...இடமாற்றிக் கொண்டாய்!* அழுக்கு பாவாடைஅடியில்...கடவாய் பல் உடைய'கமர் கட்'டைநான் கடிக்கநீ ரசித்து புசித்தாய்!* வீட்டுப் பாடம்எழுதவில்லை எனஆசிரியர் என்னை அடிக்கஅழுது துடித்தாய் நீ!* எனக்காக உன்உதடுகள் சிரித்தன...உனக்காக என்கண்கள் அழுதன!* பால்யம் முதல்...பாவாடை தாவணிபருவம் வரைபக்கத்தில் இருந்தவளே...* உதயணன் - யூகிகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தைஅதியமான் - அவ்வையார் யார் பெயரையோகூறுகின்றனர்உன்னையும் என்னையும்விட்டு விட்டுஎன்றாயே...எங்கே நீ தொலைந்தாய்!* உன் சாயலில் தெரியும்ஒவ்வொரு பெண்ணையும்ஓடிச் சென்றுஉற்று நோக்குகிறேன்நீயாக இருப்பாயோ என்று!* கல்யாணம் முடிந்துகனவுகளுடன்போனவளே...கடுதாசி எழுதுகிறேன்என்ற உன் கரத்தையார் தடுத்தார்!* நாட்கள் மாதங்களாகிமாதங்கள் வருடங்களாகிவருடங்கள் உருண்டோடிவயோதிகமும் வந்துவிட்டது...உன் கடிதம் மட்டும்வரவேயில்லை!* காத்திருக்கிறேன் தோழி...காலன் என்னைஅழைப்பதற்குள்காண்பதற்குஒரு முறை வந்துவிடு!— ப.திலகவதி முருகதாஸ், தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !