உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

உதிர்க்க முடியாத இதழ்கள்!* அன்பே...அடிக்கோடிட்டு நீசொன்ன வார்த்தைகள்மாக்கோலம் அல்லஅழிந்து போவதற்கு!* காட்சி அளிக்கும்படிகரும்பலகையில்எழுதி வைச்ச காதல் அல்லதுடைப்பான் கொண்டுதுடைப்பதற்கு!* ஒப்பந்தம் போட்டுஉண்டானது இல்லைஉன் நினைவுகள்உடைந்து போவதற்கு!* 'என்னை நீ மறந்து விடு'என்று சொல்லும் போது தான்ஊற்று நீராய் சுரக்கிறதுஉன் நினைவுகள்!* அந்தி மழையின்மண் வாசனைஅதனின் பங்கிற்குஉருட்டிச் செல்கிறதுஉன் நினைவுகளை!* என் எழுத்தாணிக்கும்இயலுவதில்லைஉன் நினைவில்லாமல்எழுதத் தொடங்குவதற்கு!* மதுரம் இல்லாததேனீர் பருகும் போதெல்லாம்உன் நினைவுகளைசேர்த்துக் கொள்கிறேன்!* உறக்கம் கொள்ளும் போதெல்லாம்உன் நினைவுகள் என்னைதின்று தீர்க்கின்றன!* உன்னுடனானநினைவுகள்ஒரு போதும்உலர்ந்து போவதுமில்லைஉதிர்ந்து போவதுமில்லை!* ஓடும் உதிரத்திலும்உன் நினைவுகள்ஊற்றை விட வேகமானவை!* அவைகள்நுழைந்ததுஒரு வழிப்பாதையில்! * மறந்து விடுவதற்கோமறைப்பதற்கோ...மரணம் ஒன்றேமார்க்கம்!* அதுவே உனக்குசொர்க்கம் எனில்நாளை மரணம்என்றாலும்மகிழ்ச்சியாகவே மரிப்பேன்உன் நினைவு பிம்பங்களோடு!— க.அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !