உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

திரும்பிப் பார்!* திரும்பிப் பார்!வெற்றிப் பாதையில்வீறு நடை போட்டாலும்கடந்து வந்த பாதையைசற்றேனும் திரும்பிப் பார்!* அன்னை இல்லையென்றால்அகிலத்தில் நீயேதுஅன்பு ஊட்டிய அவளைமுதியோர் இல்லத்திலே விடலாமா?சற்றேனும் திரும்பிப் பார்!* வேண்டியது கொடுக்கவசதியில்லாவிட்டாலும்நீ வேண்டியதை எல்லாம்கொடுக்க அயராது உழைத்தஉன் அப்பாவைதோள் கொடுத்து தாங்கியதுண்டா?சற்றேனும் திரும்பிப் பார்!* தன் நலம் கருதாதுஉன் நலம் கருதிஉனக்கு அறிவூட்டிஉன் உயர்வில் பெருமையடைந்தஆசிரியன் போல்யாருக்கேனும் வழிகாட்டினாயா நீ?சற்றேனும் திரும்பிப் பார்!* உன்னையே சுற்றிச் சுற்றிஉயிராய் உணர்வாய்உன் துயரம் துடைத்திட்டநண்பன் நல்லாயிருக்கானா?சற்றேனும் திரும்பிப் பார்!* மரம் வெட்டிஜன்னல் செய்தோம்கதவு செய்தோம்பீரோ செய்தோம்கட்டில் செய்தோம்ஒரு மரமாவது நட்டு வைத்தோமா?சற்றேனும் திரும்பிப் பார்!* குளத்து நீரில் குளித்தோம்ஊரணி நீரைக் குடித்தோம்ஆற்று நீரில் பயிர் செய்தோம்ஏரி நீரில் உல்லாச பயணம் போனோம்என்றேனும் எதையேனும்சுத்தப்படுத்தினோமா?சற்றேனும் திரும்பிப் பார்!* திரும்பிப் பார்...இருளடைந்த வாழ்க்கை பலருக்குசிறு வெளிச்சமாவது அதில்ஏற்ற முடியுமாவெனசற்றேனும் திரும்பிப் பார்!— சுபானு, கழனிவாசல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !