உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பறக்க முடியும்!* சிறகுகள் இல்லாதபறவைகளைப் போலவேகற்பனை செய்தும்பார்த்திட இயலாதுஉறவுகள் இல்லாதமனிதரை!* பறவைகள் அடைகிறகூடுகளுக்கும்மனிதர்கள் அடைகிறவீடுகளுக்கும்பேதம் ஏதுமில்லை!* மெல்லிய கிளைகளிலும்சிறகுகளை நம்பிவந்து அமரும்பறவைகளாய்...வாழ்க்கையில் வந்துஅமர்ந்திருக்கிறோம்உறவுகளை நம்பிமனிதர்களாகிய நாமும்!* நம்மை உயரத்திற்குஅழைத்துச் செல்வதில்சிறகுகள் போலவேஉறவுகளும்ஒன்றாய் இயங்குகின்றனசொந்தங்களாய்பந்தங்களாய்தோழமைகளாய்!* சக பறவைகளோடுபறத்தலாயினும்எதிரிப் பறவைகளிடம்தப்பித்தலாயினும்சிறகுகளைப் போலமனிதருக்கும்அதிகம் உண்டுஉறவுகளின் அவசியமும்!* உதிர்ந்த சிறகுகளைவளர்த்தாக வேண்டியபறவைகளைப் போல...பழைய உறவுகளைத்தக்க வைப்பதும்புதிய உறவுகளைதுளிர்க்க வைப்பதும்அவசியமானவையேமனிதர்களுக்கு!* எப்போதேனும்சிறகுகளால் பறவைகளுக்கும்உறவுகளால் நமக்கும் சிற்சில சோதனைகள்உண்டு எனினும்...* சிறகுகளைபறவைகளும்உறவுகளைமனிதர்களும்சுமையாகக் கருதாதவரைஎப்போதும்பறக்க முடியும்மகிழ்ச்சி வானில்!— என்.ரமேஷ், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !