உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

நாம் கொஞ்சம் மழை கொஞ்சம்இருட்டுவெளி எங்கும்மின்னிமின்னிக் காட்டுகிறதுஇன்னொரு மழை வானம்!மழை குடிக்கும் மரம் கொஞ்சம்தலை குளிக்கும் கூரையைகுடைபிடித்தபடி நனையும்வீடு கொஞ்சம்தொலைதூர வெட்டவெளி கொஞ்சம்!நீ கொஞ்சம், நான் கொஞ்சம்நாம் கொஞ்சம்நம் விரல் பின்னல்கள் கொஞ்சம்!பட்டுத்தெறிக்கும் மழைத்துளிகள்சுட்டுத்தீயும்நம் உஷ்ணம் கொஞ்சம்!நனைந்தூறிய பூக்கள் கொஞ்சம்அதில், நனையும் பிழியும், கிழியும்மேகத்தின் ரகசியம் கொஞ்சம்இருட்டுவெளி எங்கும்மின்னிமின்னிக் காட்டுகிறதுஇன்னொரு மழைவானம்!பழைய மின்னல்பதிவு செய்திருந்த காட்சிகளிளெல்லாம்நம் சலனங்களும்,நம் சங்கமங்களும் கொஞ்சம்...அதில், கொஞ்சம்குளிர் விட்டுப் போன நம்மால்குளிர் காய்ந்து கொள்கிறதுநம் மழை கொஞ்சம்!நீ விடை கொடுத்தஒற்றையடிப்பாதை எனக்குஇன்னும் இன்னும் கொஞ்சம்நீளுமோ!நரைத்த தனிமையோடும்இருட்டுவெளி எங்கும்மின்னிமின்னிக் காட்டுகிறதுஇன்னொரு மழைவானம்!எப்போதும்அடிவானில் இடைவிடாதுநனைந்து கொண்டே இருக்கும்நம் உலகம் கொஞ்சம்!- விவேகானந்த பாஸ்கர்.திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !