உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தமிழா ஏன் இந்த அவலம்?வீரத் தமிழனாய்சரித்திரத்தில்இடம் பிடித்ததுஅந்தக் காலம்...குடிகாரத் தமிழனாய்சாராயக் கடையில்இடம் பிடிப்பதுஇந்தக் காலம்!போரில் புறமுதுகிடாதுஎதிர்த்து நின்றதுஅந்தக் காலம்...'பாரில்' புறமுதுகிட்டுவீழ்ந்து கிடப்பதுஇந்தக்காலம்!போருக்குத் திலகமிட்டுஉற்சாகமாய் அனுப்பியதுஅந்தக் காலம்...ஊருக்குக் கூடபயந்து கொண்டேஅனுப்புவதுஇந்தக்காலம்!ஜல்லிக்கட்டு காளைகள்மிரண்டு ஓடியதுஅந்தக்காலம்...மனைவியும், குழந்தைகளும்பயந்து ஒதுங்குவதுஇந்தக் காலம்!பகைவர்கள் பலரும்அஞ்சி நடுங்கியதுஅந்தக் காலம்...குடிகாரத் தமிழனின்இரண்டு கைகளும்நடுங்குவதுஇந்தக் காலம்!வீரத்தையும், ஈரத்தையும்உலகிற்கு கற்பித்த தமிழாஏன் இந்த அவலம்?மதுக்கிண்ணத்தைநாடும் எண்ணத்தைமனதிலிருந்துதூக்கி எறிந்து விடு...மனைவி மக்களின்கண்ணீரைத்துடைத்து ஆறுதல் கொடு...உலகத்திற்கேஉதாரணமாய்மீண்டு(ம்) வாழ்ந்து காட்டு!— ஆர்.வி.பதி, கல்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !