உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மவுனம் சிதைய வேண்டும்!கருவினிலிருக்கும் குழந்தையின் காதில்தாயின் மொழி பேசும்!வானில் தவழும்வட்ட நிலா காயும் முற்றத்தில்பாட்டியின் கதை பேசும்!தேனில் ஊறும் வண்டின் நாக்கில்சர்க்கரை சுவை பேசும்!சேற்றில் நெளியும் புழுவின் உடம்பில்தண்ணீர் குணம் பேசும்!நாற்றில் தெரியும் நெல்லின் உருவில்பசியின் உயிர் பேசும்!ஊரில் உலாவிடும் தறுதலை வாழ்வில்தோல்வியின் பயம் பேசும்!பேரைக் கெடுக்கும் பொறுக்கியின் நாவில் கசக்கும் மொழி பேசும்!பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் நாட்டில்காவியம் பல பேசும்!அஞ்சல் அனுப்பிய நாட்களில் நாமோஅதிகம் பேசி விட்டோம்இன்றோ...நெஞ்சுகள் நெருங்கிடகணினியின் தயவில் வார்த்தைகளைதொலைத்து விட்டோம்!உறுத்திய முகத்தோடு உறவாடி 'ஸ்கை'ப்பினில் கரம் பிடித்தோம்!பந்தம் பாசத்தைமுகநூலில் பதிந்து,பக்கத்தில் அமர்ந்திருப்போரிடம்மவுனம் காக்கிறோம்!வார்த்தைகளுக்கு ஏற்பட்டவறட்சிக்கு காரணம்சமூகதளமே சாட்சி!மனிதனின் மவுனம்காலத்தின் இழப்பு!பிறவி என்று மீண்டும் வந்தால் பேசவொரு கூட்டம் வேண்டும்துறவரம் தேடும் மவுனம் உடையஉறவுகள் தொடர வேண்டும்!சிரித்து மகிழ சிந்தனைகள் விரியபகிர்ந்து கொள்ளவாழும் காலம் கடத்தமவுனம் சிதைய வேண்டும்!— மணி லட்சுமிநாராயணன், அமெரிக்கா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !