உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நெற்றிக்காசு!காசு கடவுள் படைத்ததல்ல...ஆனாலும், காசைகடவுளுக்குகாணிக்கையாக்குகிறான்மனிதன்!காசை,'நாணயம்' என்றான்அந்நாள் மனிதன்!நாணயம் பார்த்தால்நாணயம் வராதென்கிறான்இந்நாள் மனிதன்!படிக்காதவன்காசுக்கு அலைகிறான்...படித்தவன்டாலருக்கு அலைகிறான்!காசில்லாதவன்தூசுக்குச் சமம்உண்மைதான்...ஆனாலும்,நெற்றிக்காசு கூடநிரந்தரமில்லை என்பதுதானேநிதர்சனம்!நேர்வழியில் வராத காசுநெற்றியிலும்ஒட்டாதென்பதைஎப்போது உணரப் போகிறோம்?— ரேவதி நீலமேகம்,பெரமனூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !