உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மனிதன் உயர்வதெப்போது?ஆசையால் - தெரிந்தே நம்கைவிட்டு உருண்டோடுகின்றனநாணயமின்றி நாணயங்கள்!பேராசையால் - தொலைவிலிருந்துஎள்ளி நகைக்கிறது - நம்கை தவறிய வாய்ப்புகள்!அலட்சியம்மனதில் சிம்மாசனமிட்டதால்கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாத கதையாய்நீளுகின்றன ஏமாந்த பொழுதுகள்!வறட்டு கவுரவத்திற்காகவிலக்கி வைத்ததில்விளங்கியதும், விளங்காததும்சேர்ந்து தொலைந்து போயின!பெருமைக்காகதோள் குலுக்கி ஒதுக்கியதில்அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்தொலைந்து போனதால்மருக வைத்தன இழப்பின் வலிகள்!மூட நம்பிக்கையுடன்ஜாதி, மத விழுதுகளை நம்பிபகுத்தறிவு வேர்களைப் புறந்தள்ளியதால்மனிதம் - நித்தியக் கண்டத்தில்சிக்கிக் கொண்டது!கிடைத்ததைஇருத்திக் கொள்ளாமல்கடந்ததை எண்ணி வருந்துவதால்எந்த முகாந்திரமுமின்றிகரைந்து போகிறது மனிதம்!எண்ணுபவர் - விழிப்பர்விழிப்பவர் - உழைப்பர்உழைப்பவர் - உயர்வர்உயர்வோர்க்கே இவ்வுலகம்!இவையாவும் உய்வோர்க்குபுரிதல் எப்போது;மனிதம் உயர்வதெப்போது?— செல்லம் ரகு, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !