உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தினந்தோறும் தீபாவளி!வறுமை துயர் நீங்க வேண்டும்வாசல்தோறும் வளங்கள்வழிய வேண்டும் - என்றமீட்பின் குரலோடுஅரியணையில் அமர்ந்தோர்வாக்குறுதிகள் காற்றில் கலக்காதுவாணவேடிக்கையாய் - பலவண்ணங்களில் மின்ன வேண்டும்!'ஆட்டம் பாமாய்' வெடித்துநாள்தோறும் பயமுறுத்தும்விலைவாசி ஏற்ற இறக்கங்கள்வாழும் வேட்கையை-தகர்க்காது காக்க வேண்டும்!நிம்மதி - சரவெடியாய்படபடத்துச் சரியாமல்சிந்தை பூக்கும் ஆசைகள்அணை தாண்டி மகிழ வேண்டும்!மதுவில் மயங்கி - உழைத்தும்வீடு சேரா ஊதியத்தால் - பசிபட்டினிச் சாவெனும் அவலங்கள் சங்குச்சக்கரமாய் - நித்தமும்வாழ்வை சுற்றாத நிலை வேண்டும்!சின்னச்சின்னஆசைகளின் வண்ணக்கனவுகளில் மத்தாப்பூ சிதறல்கள்பூத்துச் சிரிக்க வேண்டும்!பொய், புரட்டு, சூது, லஞ்சமெனபுதுப்புது முகமூடிகளுடன்திரை மறைவு பொம்மலாட்டங்கள்எரி குச்சியாய் கரையபுது உதயம், புது வாழ்வெனபுத்துணர்ச்சி பொங்க வேண்டும்!எண்ணங்கள் - மறந்துஆசைகள் - துறந்துவாழும் வழிகள் - இழந்துவாசல் விட்டு வீதியில் தவித்தலின்றிகிழக்கு வெளுக்கும் நாௌல்லாம்எம்மக்களுக்கு - தினந்தோறும்தீபாவளியாக வேண்டும்!— செல்லம் ரகு, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !