உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வீறு கொண்டு எழு!புத்தாண்டு பிறக்கும் நேரமிதுபுதிய சபதம் ஏற்கும் முன்பழங்கதையைப் புரட்டிடுவோம்!திரைமறைவிலிருந்த தீவிரவாதம்மெல்ல மெல்ல தலையெடுத்துதேசமெங்கும், 'தெருக்கூத்து' நடத்துகிறது!பெண்மையைப் போற்றிய பாரதத்தில்பாலியல் வன்முறையோபச்சிளங் குழந்தையைக்கூடபலாத்காரம் செய்து வீதியுலா போகிறது!நம் தன்மானமோநாட்காட்டியில் தினம் தினம்கிழிக்கப்படும் தாள்களைப் போல்நலிவடைந்து போகிறது!நல்லொழுக்கத்தையும், நாட்டுப்பற்றையும்எந்தக் கடையில் அடகு வைத்தோம்?எப்படித் தான் மீட்டெடுப்போம்எனத் தெரியவில்லை!புத்தாண்டு பிறக்கிற நேரமிதுபுதிய சபதம் ஏற்றிடுவோம்!பாரதத்தை பாரினில் உயர்த்திடவேற்றுமைகளை வேரோடு சாய்த்திடஅண்ணல் காட்டியஅகிம்சை மட்டும் போதாதெனில்...பாரதி பாடிய வழியில்ரவுத்திரமும் பழகிடுவோம்...வீறு கொண்டு எழுந்திடுவோம்வீணர்களை முறியடிப்போம்!— எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !