கவிதைச்சோலை!
வரமா, சாபமா?போர்க்களத்தில்பூத்தொடுக்கும்போட்டி வைக்கிறாய்!சிக்கல்களில் சிக்க வைத்துசிகரம் தொடநிர்பந்திக்கிறாய்!பெண்ணாய் பிறக்க வைத்துபேரிடி தந்து விட்டாய்!வறுமை, வஞ்சனைசுடுசொல் இவற்றால்பாதை சுமக்கிறாய்!கற்பு எனும் பெயரில்உளி கொண்டு உள்ளத்தைஉரசிப் பார்க்க விடுகிறாய்!கண்ணீரில் கரைந்துகரையேற வழியின்றிதவித்துப் போகிறேன்திக்குதிசை தெரியாமல்திணறிப் போகிறேன்!என் உணர்வுகள்உதிரங்களால் உதிர்க்கப்படுவதைநீ அறியாயோ?நீ அளித்த வாழ்க்கைஎனக்கு வரமா, சாபமா?வரம் என்றால்வசந்தத்தை வழித்துணையாக்கு...சாபம் எனில்சாவையாவதுசடுதியில் சபையேற்றிடு!இறைஞ்சுகிறேன் இறைவா...என் கவிக்குசெவி சாய்த்திடு!— ஆர்.மீனா, மதுரை.