உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தெரிந்து தான்!தெரிந்துதான் செய்கிறோம்...பிளாஸ்டிக் கழிவுகளையும்மிச்சம் மீதிகளையும்வீதிக் கால்வாய்களில் போடுகிறோம்!வீட்டை பெருக்கிகுப்பைக் கூளங்களைகுப்பைத் தொட்டியில் போடாமல்தெருவில் கொட்டுகிறோம்!கழிப்பறைக் குழாயில் மட்டுமல்லசாக்கடைக் குழாய்களிலும்வேண்டாததைப் போட்டுதண்ணீர் ஊற்றி விடுகிறோம்!கட்டட இடிபாடுகளைக் கொட்டிநம் வீட்டை மட்டும் மேடாக்கிசுயநலத்துடன் தண்ணீர் வராமல்தற்காத்துக் கொள்கிறோம்!ஆறு, குளம், ஏரி, கால்வாய்களைஆக்கிரமித்து பிளாட் போட்டுகட்டடங்கள் கட்டிக் கொள்கிறோம்!விதி மீறல்களுக்கும், ஊழல்களுக்கும்லஞ்சத்திற்கும் ஆதரவு அளித்துஅதிகாரத்திற்கு அடிபணிந்துசுயநலவாதிகளாக செயல்படுகிறோம்!இத்தனையையும் செய்யும் நமக்குதெரிந்தது ஒன்று தான்...அரசையும், அதிகாரிகளையும்குறை சொல்லிக் கொண்டிருப்பது!— சொல்கேளான் ஏ.வி.கிரி,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !